மதுரை: மத நல்லிணக்க மாநாடு; தொல் திருமாவளவன் பேச்சு

59பார்த்தது
மதுரை: மத நல்லிணக்க மாநாடு; தொல் திருமாவளவன் பேச்சு
மதுரை, கேகேநகரில் உள்ள நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கில், மக்கள் நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் நேற்று மதநல்லிணக்க மாநாடு நடந்தது. 

இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: 'தமிழ்நாடு முதல்வர் மதவாத சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதுரை மாநகர காவல்துறை மற்றும் ஆட்சி நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு, அந்த நம்பிக்கையில் நாம் தலையிடவில்லை, அதனை பின்பற்றினால் மதநல்லிணக்கம் துளிர்க்கும். அதை புரிந்துகொள்ளத்தான் இந்த மாநாடு. மத குருமார்களை வைத்து அரசியல் செய்வதை நாம் கண்டிக்க வேண்டும். மதத்தை கையில் எடுத்து மதத்திற்கு எதிரான அரசியலை விதைப்பதால்தான் பிரச்சனை எழுகிறது. 

சங்கராசாரியார்கள் பாஜகவை கண்டிக்காமல் இருக்கிறார்கள். இந்து மக்களிடம் இஸ்லாம், கிறிஸ்தவம் அந்நிய மதம் என வேற்றுமை படுத்துகிறார்கள், சிறுபான்மை மதத்தினர் மீது வெறுப்பை விதைக்கிறார்கள். இந்து மக்கள் மாட்டுக் கறியை உண்ணுகிறார்கள், அதில் புரதச் சத்து இருக்கிறது என மக்கள் அதிகளவில் மாட்டு இறைச்சி எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கே அதை வைத்து சங்கரிவார் கும்பல் அரசியல் செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்' என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி