மதுரை: நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்த பொதுமக்கள்

84பார்த்தது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் முகாமில் பல்வேறு மனுக்களை அளிப்பதற்காக மதுரையின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்தனர்.

குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெறும் என்பதால் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், ஏற்கனவே அளிக்கப்பட்ட அனுமந்த பட்டாக்களுக்கு இடத்தை அளப்பது, இ- பட்டா வழங்க வேண்டும், மகளிர் உரிமைத் தொகை வேண்டியும் , நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகைகளை வழங்க கோரியும் ஏராளமான பெண்கள் மற்றும் தாய்மார்கள், முதியவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் மனுக்களை பதிவு செய்து காத்திருந்தனர்.


காலை 10 மணி முதல் 11 மணிக்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பெறுவார் என்பதால் மனுக்களை அளிப்பதற்காக பதிவு செய்யப்பட்ட மனுக்களை கையில் வைத்தபடி பொதுமக்கள் காலை 10 மணி முதல் காத்திருந்தனர்.

ஆனால் காலை 12 மணியான நிலையில் மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பெற நடவடிக்கை எடுக்காத நிலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக அனைவரும் கால்கடுக்க காத்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் சங்கீதா கடந்த வாரம் குறைதீர் கூட்டங்களில் பெற்ற மனுக்கள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் 12 மணி வரை ஆலோசனை நடத்தியதாகவும், இதனால் ஒரே நேரத்தில் மனு அளிக்க பொதுமக்கள் சென்றதால் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி