மதுரை வழக்கறிஞர் சங்க உண்ணாவிரத போராட்டம்

69பார்த்தது
மதுரை வழக்கறிஞர் சங்க உண்ணாவிரத போராட்டம்

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட முப்பெரும் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கிய நிலையில். , முப்பெரும் சட்டங்கள் குறித்து அந்தந்த மாநில அரசு மற்றும் நீதிமன்றங்களுக்கும் மற்றும் மாநில காவல்துறைக்கும் முறையாக அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.

இந்நிலையில் நாடுமுழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கத்தினர் மத்திய அரசின் முப்பெரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இன்று முதல் ஜூலை 8-தேதி முதல் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர் திருத்தங்களை செய்ததை உடனே நிறுத்தி வைக்க வலியுறுத்தி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி