மதுரை: வீட்டுமனை பட்டாவை திரும்ப ஒப்படைத்த மாற்றுத்திறனாளி

75பார்த்தது
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான முத்துக்கிருஷ்ணன். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் போது இலவச வீட்டு மனை அனுமந்த பட்டாவை முதலமைச்சரிடமிருந்து பெற்று கொண்டுள்ளார்

இந்நிலையில் தனக்கு அனுமந்த பட்டா வழங்கப்பட்ட நிலையில் தனது பட்டா நிலத்தை நேரில் காண்பிக்க வேண்டும் எனவும் இடத்தை அளந்து கொடுக்க வேண்டி பலமுறை அரசு அலுவலகத்திற்கு அலைந்து திரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மேலும் இது குறித்து கேட்கும் போது அமைச்சர் பரிந்துரையின் பெயரில் தான் உங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது என கூறி இழிவு படுத்துவதாகவும் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய அனுமந்த பட்டாவை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து சென்றார்.

இது குறித்து பேசிய மாற்றுத்திறனாளி முத்துகிருஷ்ணன்:

மதுரை மாவட்டத்தில் இந்த கலெக்டர் இருக்கிற வரைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

இங்கு 150 தடவை வந்திருப்பேன், இப்டியே போனா கலெக்டர் ஆபீஸ்ல உட்கார்ந்து பிச்சைதான் எடுக்கணும் என குற்றம் சாட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி