குளிர்பானம் உற்பத்தி நிறுவனங்களில்: அதிரடி சோதனை

53பார்த்தது
மதுரை: சென்னையில் குளிர்பானம் அருந்தி குழந்தைக் உயிரிழந்ததை தொடர்ந்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை 3 குளிர்பான மொத்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை

உள்ளூரில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களால் உடல்நிலை பாதிக்கப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சென்னையில் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானத்தை குடித்த குழந்தை உயிரிழந்து, இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 3 நாட்களாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.

குளிர்பானம் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் குளிர்பானங்கள் மொத்தமாக விற்பனை செய்யக்கூடிய கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது, ஆய்வில் போது காலாவதியான 32 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டது, 10 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு 7 கடைகளுக்கு தலா 1, 000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 21 குளிர்பானங்கள் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, காலாவதியான குளிர்பானங்களை மொத்தமாக விற்பனை செய்த 3 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி