உண்ணாவிரத போராட்டம்; முன் அனுமதி கோரி மனு

78பார்த்தது
அதிமுக அம்மா பேரவையின் சார்பில், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரியும், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்களை மீண்டும் வழங்க கோரியும், உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதற்குரிய நாள், தேதி, இடத்தை ஆகியவற்றை கழக பொதுச் செயளாலர் எடப்பாடியார் அறிவிக்கிறார்.

இதனை தொடர்ந்து அதற்கான முன் அனுமதியை பெற மதுரை மாநகர் காவல்துறை ஆணையாளரிடம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர். பி. உதயகுமார் மனு அளித்து அதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

தொழில் துறை அமைச்சர் கூறிய அறிக்கையை வெள்ளை அறிக்கை என்று முதலமைச்சர் கூறுகிறார்.
நாங்கள் தங்கத்தை கேட்கிறோம், ஆனால் அவர்கள் கூறுவதோ பித்தளையில் தங்கம் பூசுவது போல கூறுகிறார்கள. வெள்ளை அறிக்கை கூறுவது மரபாகும் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி