இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது அகில இந்திய மாநாடு வருகின்ற 2025 ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான
வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் எம். பி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன்,
மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;
அகில இந்திய மாநாட்டில் நாடுமுழுவதிலும் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து புதிய மத்திய குழு மற்றும் கட்சியின் பொது செயலாளர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மத்திய மோடி அரசை கண்டித்து நவம்பர் 8 தேதி முதல் 15ஆம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இல்லாத நிலை , விலைவாசி உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த படும்.
கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கக்கூடிய ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது அது கண்டனத்திற்குரியது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டி பரஸ்பரம் விவாதித்துக் கொள்ளும் கூட்டணியாக உள்ளது என்று பேசினார்.