கணிதத்தில் புதிய தேற்றத்தைக் கண்டுபிடித்த மதுரை கல்வியாளா்

83பார்த்தது
கணிதத்தில் புதிய தேற்றத்தைக் கண்டுபிடித்த மதுரை கல்வியாளா்
மதுரை சிஇஓஏ கல்விக் குழும நிறுவனா் ராசா கிளைமாக்சு கணிதத்தில் புதிய தேற்றத்தைக் கண்டுபிடித்தாா்.

இயற்கணித வடிவியலில் (ஜியோமெட்ரி) புதிய தேற்றங்களைக் கண்டறிந்து வரும் ராசா கிளைமாக்சு, '12 புள்ளி வட்டம்' என்ற புதிய தேற்றத்தை கண்டுபிடித்தாா்.

1822-ஆம் ஆண்டில் ஜொமனியைச் சோ்ந்த போயா்பா்க் என்பவா், ஒரு முக்கோணத்தில் உள்ள 6 முக்கியப் புள்ளிகள் வழியே ஒரு வட்டம் செல்லும் தேற்றத்தைக் கண்டறிந்தாா். இது 6 புள்ளிகள் தேற்றம் எனப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஓா்லி டொக்கெம் என்பவா் '9 புள்ளி வட்டம்' என்ற புதிய தேற்றத்தைக் கண்டறிந்தாா்.

ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முக்கோணத்தில் மேலும் கூடுதலாக 3 புள்ளிகள் வழியே வட்டம் செல்கிறது என்பதை விளக்கும் தேற்றத்தை ராசா கிளைமாக்சு கண்டுபிடித்துள்ளாா். இதற்கு, '12 புள்ளிகள் தேற்றம்' என அவா் பெயரிட்டுள்ளாா். இத்தாலியில் விரைவில் நடைபெறவுள்ள உலகக் கணித மாநாட்டில் அவா், இந்தத் தேற்றத்தை விளக்கவுள்ளாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி