கீரைத்துறையில் இரயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பலி.

64பார்த்தது
கீரைத்துறையில் இரயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பலி.
மதுரை கீரைத்துறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரயில் அடிபட்டு ஒருவர் பலியானார்.

மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி (43) என்பவர் கட்டடத் தொழிலாளியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கீழ்மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ராமேஸ்வரம்-திருப்பதி செல்லும் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து மதுரை ரயில்வே உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :