சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சற்று நேரத்தில் நடைபெறும் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பெற்றுக் கொள்கிறார். விஜய் இந்த நிகழ்ச்சிக்கு வருவதால் கிண்டி - போரூர் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதிக் காணப்படுகிறது. சற்றுமுன்னர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்த விஜய் அம்பேத்கர் சிலையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.