வறுமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஐ.நா சபை பாராட்டியுள்ளது. 2005-2006 மற்றும் 2019-2021க்கு இடையில் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை சுமார் 41.5 கோடி குறைந்துள்ளதாகவும் இது வரலாற்று மாற்றம் எனவும் ஐ.நா சபை கூறியுள்ளது. இந்தியாவில் கேரளாவில் 0.71% மக்கள் மட்டுமே வறுமையில் வாழ்கின்றனர். அதேபோல் கோவாவில் 3.76%-ம், சிக்கிமில் 3.8%-ம், தமிழ்நாட்டில் 4.8%-ம், பஞ்சாபில் 5.89% மக்களும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.