உ.பி: கன்னோஜில் லக்னோ - ஆக்ரா விரைவுச் சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து நின்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.