நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலமாக பீகார் உள்ளது. இங்கு தாய்மார்களின் ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் என அனைத்திலும் இந்த மாநிலம் பின் தங்கியுள்ளது. பீகாரைத் தொடர்ந்து ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா ஆகியவை உள்ளன. கோவாவில் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும், காஷ்மீர், ஆந்திரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் வறுமை குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.