சிவகங்கை மாவட்டத்தில் தெப்பக்குளங்களை சீரமைக்கக் கோரிய வழக்கு

71பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்காலக்குடி திருக்காலநாதா் கோயில், சூரக்குடி மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், திருச்சி துவரங்குறிச்சி அருகே உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், புதுக்கோட்டை ராங்கியம் உறங்காப்புலி கருப்பா் அங்காள பரமேஸ்வரி கோயில், திண்டுக்கல், தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களின் உள்பகுதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோயில்களின் வெளிப்பகுதிகள் போதிய பராமரிப்பின்றியும், சுகாதாரமின்றியும் காணப்படுகின்றன. மேலும், கோயில் அருகே உள்ள தெப்பக்குளம், நந்தவனம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள், நெகிழிக் கழிவுகள் குவிந்து காணப்படுகின்றன. இதனால், சுவாமிக்கு தூய்மையான தண்ணீரால் வழிபாடு நடத்த முடியவில்லை.

எனவே தென், மத்திய மாவட்டங்களில் உள்ள கோயில் தெப்பக்குளங்களைத் தூா்வாரி சீரமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனுவை நேற்று(செப்.4) விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்து உத்தரவு:

கோயில் தெப்பக்குளங்களைப் பராமரித்து, தூா்வாருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா்.

தொடர்புடைய செய்தி