வில்லாபுரத்தில் சோபாவுக்குள் 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு.

5727பார்த்தது
மதுரை வில்லாபுரத்தில் சோபாவுக்குள் இருந்த ஏழடி நீளமுள்ள சாரைப் பாம்பை பாம்பு பிடி வீரர் மீட்டார்.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன அலுவலகத்தில் உள்ள சோபாவுக்குள் பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன் பின்னர் வீட்டின் உரிமையாளரான பாலமுருகன் பாம்பு பிடி வீரரான சிவன் பாண்டி தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து சிவன் பாண்டி சோபாவை தலைகீழாக வைத்து பார்த்த போது உள்ளே ஏழடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பாம்பு பிடி வீர சிவன் பாண்டி 15 நிமிடத்திற்கு மேலாக போராடி அந்த பாம்பை பத்திரமாக மீட்டார் அதனைத் தொடர்ந்து அந்த பாம்பானது மதுரை வனத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி