மதுரை மாநகர் எஸ். எஸ். காலனி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு 951கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் பிரபாகரன், செந்தில்பிரபு, ராஜ்குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்தது. கஞ்சா கடத்திய 4 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை தலா 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இன்று (செப்.,5) நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டுள்ளார்.