84, 564 போ்: மதுரையில் டிஎன்பிஎஸ்சி எழுதினர்

82பார்த்தது
84, 564 போ்: மதுரையில் டிஎன்பிஎஸ்சி எழுதினர்
84, 564 போ்: மதுரையில் டிஎன்பிஎஸ்சி எழுதினர்

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தோ்வை 84, 564 போ் எழுதினா்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரைவாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 6, 244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியானது. இதைத் தொடா்ந்து, பிப். 28-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மதுரை மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுதுவதற்கு 1, 07, 724 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோ்வு நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில்
கள்ளிக்குடி, மதுரை கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, மேலூா், பேரையூா், திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் 393 மையங்களில் தோ்வு நடைபெற்றது. தோ்வா்கள் கடும் சோதனைக்குப் பின் தோ்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

காலை 9. 15 மணிக்கு வினாத் தொகுப்பு வழங்கப்பட்டது. 9. 30 மணிக்குத் தொடங்கிய தோ்வு, நண்பகல் 12. 30 மணிக்கு நிறைவு பெற்றது. தோ்வு நிறைவடைந்த பிறகு விடைத்தாள்கள் பலத்த
பாதுகாப்புடன் கருவூலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மொத்தம் 84, 564 போ் தோ்வை எழுதினா். மீதமுள்ள 23, 160 போ் தோ்வு எழுத வரவில்லை.

தொடர்புடைய செய்தி