நிலம் கையகப்படுத்த அனுமதி ஆணை வெளியீடு

72பார்த்தது
நிலம் கையகப்படுத்த அனுமதி ஆணை வெளியீடு
பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் எடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதற்கு ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகள் இருந்தால் 30 நாள்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வளத்தூர், தண்டலூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி