சீமானுக்கு பாராட்டு கவிதை - வைரமுத்து பதிவு

74பார்த்தது
சீமானுக்கு பாராட்டு கவிதை - வைரமுத்து பதிவு
நாடாளுமன்ற தேர்தலில் நாதக 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றதை பாராட்டி கவிஞர் வைரமுத்து தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன். ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது. இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது ஆனால் இனி - கழிப்பது இயலாது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி