ஜம்மு காஷ்மீர் விபத்து: 10 பேர் பலி - நடந்தது என்ன.?

84பார்த்தது
ஜம்மு காஷ்மீர் விபத்து: 10 பேர் பலி - நடந்தது என்ன.?
ஜம்மு காஷ்மீரில் உள்ள சிவகோரி கோவிலுக்கு நேற்று(ஜூன் 9) மாலை பக்தர்கள் சிலர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். ரியாசி மாவட்டம் தெரியத் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த டிரைவர் பேருந்தை சரியாக இயக்க முடியாமல் தடுமாறினார். இதனால் பேருந்து பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி