தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

58பார்த்தது
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் சமீப காலமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 10) காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி