மதுரையில் காணாமல் போன சுமார் ரூ 45, 24, 000 மதிப்புள்ள 348 செல்போன்கள் மீட்கப்பட்டது.
மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன 348 செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் 348 செல்போன்கள் மீட்கப்பட்டன (கோவில் சரகம் -56, தெற்குவாசல் சரகம் -07, திருப்பரங்குன்றம் சரகம் -08, அவனியாபுரம் சரகம் -13, திடீர்நகர் சரகம் -53, திலகர் திடல் சரகம் -02, தல்லாகுளம் சரகம் 78, செல்லூர் சரகம் -29, அண்ணாநகர் சரகம் -102, - மீட்கப்பட்ட தேதி செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் மாநகர துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு, தலைமையிடம் மற்றும் போக்குவரத்து ஆகியோர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூபாய் 45, 24, 000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.