சோழவந்தான் - Cholavanthaan

சோழவந்தான்: பேரனை தொடர்ந்து பாட்டியும் மரணம்

சோழவந்தான்: பேரனை தொடர்ந்து பாட்டியும் மரணம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் பழைய காலனி ஆறுமுகத்தின் மகன் அய்யனார் (45) மனைவி உமா என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன் கணவன் மற்றும் இரு மகள்களை பிரிந்து, அதேபகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் விவேக் என்பவருடன் ஊரை விட்டு சென்று விட்டார். இதனால் முத்தராமலிங்கம் குடும்பத்துடன் அய்யனார் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் கடந்த அக். 3ம் தேதி இரவு மது போதையில் அய்யனார் முத்துராமலிங்கம் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த முத்துராமலிங்கம், அவரது மனைவி தவமணி (55), மகள் வழி பேரன் விஷ்ணுவை( 7), கத்தியால் வெட்டினார். இதில் அக். 4ல் விஷ்ணு உயிரிழந்தார். இக்கொலை வழக்கில் அய்யனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவமணி நேற்று (அக்.,19) உயிரிழந்தார். மேலும் முத்துராமலிங்கம்( 60), மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். பேரன் இறந்த நிலையில் பாட்டியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా