சோழவந்தான்: தண்டவாளத்தில் தலை வைத்து டிரைவர் தற்கொலை
மதுரை மாவட்டம் சமயநல்லுார் அருகே கட்டபுலி நகரில் வசிக்கும் சுரேஷ் பாண்டி (29) என்பவர் தார் சாலை அமைக்கும் ஜல்லி பரப்பும் இயந்திர டிரைவராக உள்ளார். இவர் நேற்று (நவ. 9)மாலை தேனுாரில் உள்ள மதுக்கடை அருகே மதுரையிலிருந்து சென்னை சென்ற தேஜஸ் ரயில் வந்தபோது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளது. இரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.