மதுரை மாவட்டம் சோழவந்தானில் மின்சார வாரியம் இருக்கும் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மின்சார வாரியம் அருகில் தீயணைப்புத் துறை அலுவலகம், காவல்துறை அலுவலகம், பெட்ரோல் பங்க் நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் உள்ள நிலையில் மின்கம்பங்களில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மின்விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.