மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பரவை முத்துநாயகி அம்மன் கோயில் உற்சவ விழா கடந்த அக். 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தார்கள். நேற்று அக்னி சட்டி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று (அக். 29) இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (அக். 30) வைகை ஆற்றில் இருந்து அலகு குத்தி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. நாளை (அக். 31) கருப்பண்ணசாமி கோயில் முன் பொங்கல் வைத்து முளைப்பாரி ஊர்வலம், நவ. 1ல் பெருமாள் கோயில் முன் பொங்கல் வழிபாடு, நவ. 2 மாலை 3: 00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவால் பரவை கிராமம் விழா கோலமாக காட்சி அளிக்கிறது.