ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலை; இருவர் கைது

5665பார்த்தது
ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலை; இருவர் கைது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் கஞ்சா கடத்திய நபர்களை போலீசார் கைதுசெய்தனர்.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், வாடிப்பட்டி காவல் நிலைய சரகத்தில், சட்டத்திற்கு புறம்பாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 155 கிலோ கிராம், ( மதிப்பு 20 லட்சம் ரூபாய் உள்ள புகையிலை பொருட்களை) கடத்திச் சென்ற இரண்டு நபர்களை மதுரை மாவட்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், கைது செய்த நபர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் ஒன்றும், பணம் 32, 000/- செல்போன் மூன்று, இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்து, குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறப்பாக பணிபுரிந்த தனிப் படை காவல் துறையினருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ் அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி