நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழங்கால கட்டுமானம் மாறாமல் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பாராட்டு தெரிவித்துள்ள யுனெஸ்கோ நிறுவனம், கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் உள்ள ஆபத்தசகாயேஸ்வரர் கோயிலுக்கு விருதும் அறிவித்துள்ளது. பழமை மாறாமல் புதுப்பித்ததற்காக கலாச்சார பாரம்பரிய, பாதுகாப்பு விருது அறிவித்துள்ளது.