ஹோண்டா நிறுவனத்தின் GB350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஹோன்டா CB350 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரெட்ரோ பைக் போன்ற தோற்றம், ஏர்-கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹோண்டா நிறுவனம் சர்வதேச சந்தையில் விரிவாக்க பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இந்த புதிய மாடல் அதிக வாடிக்கையாளர்களை கவரும் என நினைக்கிறது. ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்க நினைப்போருக்கு மாற்றாக புது பைக் என்ற ஆப்ஷனை இந்த மாடல் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.