யூடியூப் வீடியோக்களை பார்த்து பயிற்சி எடுத்து கடந்த 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் நேற்று (டிச. 05) கைது செய்தனர். வீட்டுக்கடனை அடைப்பதற்காக குணசேகரன் (33) இந்த விபரீத செயலை செய்திருக்கிறார். 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் சென்னை மாங்காடு போலீசார் அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர். பட்டதாரியான குணசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.