பெங்களூரில் ஜெயலலிதாவின் 481 தங்க, வைர, வெள்ளி நகைகளில் இன்று 285 நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. மீதமுள்ள நகைகள் நாளை மதிப்பீடு செய்யப்பட்டு அனைத்தும் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளன. மதிப்பீடு செய்யப்பட்ட, செய்யப்படாத அனைத்து நகைகளும் இன்று அரசு கருவூலத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒப்படைத்தனர். நாளை (பிப்.15) மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு பணி தொடர உள்ளது.