நிலச்சரிவு பேரிடரால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மறுகட்டமைப்பை செயல்படுத்த சிறப்புக் கடனாக, ரூ.529.50 கோடியை கேரளாவுக்கு ஒன்றிய அரசு வழங்க உள்ளது. சாலைகள், குடியிருப்புகள், பள்ளி உள்ளிட்ட 16 திட்டங்களை இந்நிதியில் மாநில அரசு செயல்படுத்த உள்ளது. இந்நிதியை நடப்பு நிதியாண்டில் ஒதுக்கியுள்ளதால் வரும் மார்ச் 31ம் தேதிக்குள். திட்ட செலவின அரசாணையை மாநில அரசு பிறப்பிக்க வேண்டும்.