ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்.

50பார்த்தது
ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் புகழ் பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடிமரத்திற்கு பூசாரி தீபாராதனை காட்டினார். பின் அம்மனுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து பூக்குழி, அக்னிசட்டி, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்புகட்டி விரதம் துவங்கினர்.

இக்கோவில் திருவிழா 17 நாள் நடக்கும். அதில் முக்கிய நிகழ்வாக ஜூன் 18 ல் பால்குடம், அக்னிசட்டி, பூப்பல்லக்கு, 19ல் பூக்குழி இறங்குதல், 25ல் திருத்தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா எழுந்தருள்கிறார்.

இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மண்டகபடிகாரர்கள், நிர்வாக அதிகாரி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி