மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி, எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை (M.CH) மேற்படிப்பிற்கான தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மருத்துவர் ஹரி இளங்கலை மருத்துவ படிப்பை மதுரையிலும், முதுகலை படிப்பை சென்னையிலும் பயின்றார். இவர் 100க்கு 64 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ள நிலையில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார். இதுகுறித்து டாக்டர் ஹரி நாராயன் பேசிகையில், “மூன்றாண்டு படிப்பு முடித்த பின் மீண்டும் மதுரை வந்து தென்மாவட்ட மக்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேவையை தொடருவேன்” என தெரிவித்துள்ளார்.