புதுக்கோட்டை கண்ணுப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்ட சிலர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும், லட்சுமி என்பவர் மருத்துவமனையில் இறந்தார். சங்கீதா என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார்.