நிதிச்சுமை காரணமாக டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு ரூ.10 உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4,829 மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10 விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆஃப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.