கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு!

83பார்த்தது
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிலச்சரிவு!
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், கர்நாடகாவிலும் இதுபோன்ற மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாசன் மாவட்டத்தில் சக்லேஸ்பர் தாலுக்காவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் கார் லாரி, எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆகியவை சிக்கியுள்ளது. தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணிகள் முடிவதற்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகும் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி