பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 04) நடந்த பேட்மிண்டன் ஆடவர் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென்னிடம் தோல்வியை தழுவினார். போட்டி முடிந்த பிறகு டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சென் கூறுகையில், "லக்ஷயா சென் மிகவும் அபார திறமை வாய்ந்தவர். இன்றைய போட்டி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் லக்ஷயா சென் நிச்சயம் தங்கம் வெல்வார். அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.