குற்றாலம்: ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் மக்கள்

77பார்த்தது
குற்றாலம்: ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் மக்கள்
கனமழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இதனிடையே குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்று வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீராக உள்ள நிலையிலும் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றாலத்தில் குளிக்கும் ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி