கழுத்தை அறுத்துக்கொண்ட கூலித்தொழிலாளி

51பார்த்தது
கழுத்தை அறுத்துக்கொண்ட கூலித்தொழிலாளி
திருச்சி மாவட்டம் அலகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (53), கூலித் தொழிலாளி. இவரின் மனைவி திலகவதி (45). மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பெருமாள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (மே 17) திலகவதி வழக்கம்போல பணி முடிந்து குளித்தலை சுங்ககேட்டில் பேருந்தில் வந்து இறங்கிய போது மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டத்தொடங்கினர். அப்போது அங்கு வந்த போலீசை பார்த்து தனது கழுத்தை பெருமாள் அறுத்துக்கொண்டார். இருவரையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி