வீட்டிலிருந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

72பார்த்தது
வீட்டிலிருந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
டெல்லியில் வீட்டிலிருந்து வாக்களிக்கும் மூத்த குடி மக்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.‌ வாக்குகள் பெறும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.‌ இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து வாக்களித்தார். முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் வாக்களித்தனர். டெல்லியில் உள்ள தொகுதிகளில் வீட்டில் இருந்து வாக்குப்பதிவு செய்ய 5500 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you