கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஹள்ளியில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனம் மின் கம்பியில் உரசியதால் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர். குழாய் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் வைக்கோல் தீயில் எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.