ராமேஸ்வரம் மண்டபத்தில் நாளை (ஏப்.06) காலை 11:50 மணியளவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் பிரதமர் மோடி காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைந்துள்ள மேடைக்கு சென்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பின்னர் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். தொடர்ந்து அரசு தங்கும் விடுதி வளாகத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசுவார்.