திருவண்ணாமலை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமண ஆசை காட்டி, பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவன ஊழியரான மணிகண்டன், 17 வயது சிறுமியை காதலித்து வந்ததுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சென்று, திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்துள்ளார். அதனைவைத்து, மாணவியை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால், சிறுமி 3 மாத கர்ப்பமான நிலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.