நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில், திலக் வர்மா (25 ரன், 23 பந்து, 2 பவுண்டரி) தொடர்ந்து தடுமாறியதால் அவரை 19-வது ஓவரில் 'ரிட்டயர்டு அவுட்' முறையில் மும்பை நிர்வாகம் வெளியேற்றியது. இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. இது முதல் முறை இல்லை, இதுவரை ஐபிஎல் வரலாற்றில், ரவிச்சந்திரன் அஸ்வின், அதர்வா தைடே, சாய் சுதர்சன், திலக் வர்மா ஆகியோர் ரிட்டையர்டு அவுட் ஆகியுள்ளனர்.