தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில், பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது, "தக்காளி காய்ச்சல் சுகாதாரமின்மை காரணமாக பரவுகிறது. இந்த காய்ச்சலை பொருத்தவரை ஒரு வாரத்துக்குள் தானாகவே சரியாகி விடும். அதேநேரம், பாதிப்புக்கு ஏற்ப, சிகிச்சை பெறுவது அவசியம். இத்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது" என கூறியுள்ளார்.