வி.சி.க. மாநாட்டில் பங்கேற்க வரவேற்பு

79பார்த்தது
வி.சி.க. மாநாட்டில் பங்கேற்க வரவேற்பு
உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டிற்கு அலைகடலென திரண்டு வந்து மாநாட்டை வெற்றி பெற வைக்குமாறு தொகுதி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி செயலாளர் த. தியாகு மற்றும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி செயலாளர் செம்பட்டி சிவா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை அக்டோபர் 2ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டில் ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் மாநாடாக அமையும் இந்த மாநாட்டிற்கு இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி மதுவிலக்கு கொள்கையில் ஒத்த கருத்துடைய தலைவர்கள், மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்திய அளவில் மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படும் இந்த மாநாட்டிற்கு கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் அலைகடலென திரண்டு வந்து மாநாட்டை வெற்றி பெற செய்யுமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி