கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியரான கணேசன் தனது ஊதியத்தில் 20 சதவீதத்தை ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக வழங்கி வருகிறார். பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து அந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஆசிரியர் தினத்தில் இவரது சேவையை பாராட்டி சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.