இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 கிமீ வரை நீண்டுள்ளது. இதனால், நாளை (டிச., 07) தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை-தமிழக கடற்கரையில் வரும் 12ஆம் தேதி வாக்கில் அடையும்.