மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதானிக்காக அரசியல் சாசன உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அடையாளப் போராட்டம் நடத்துகிறோம் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதானிக்கு சிக்கல் வரும்போதெல்லாம், இந்திய அரசு பிரச்சினையைத் திசைதிருப்ப நினைக்கிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.